கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482- |
தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா விண்ணில் அன்று ஒரு ஜோதி ஒன்று பெத்தலேகேம் சென்றது மண்ணில் இறையாட்சி என்ற உண்மை தாங்கி நின்றது பயணம் போகிற ஞானி அன்று வழி காட்ட பகலைப் போலவே பாதையிலே ஒளியூட்ட எல்லோருக்கும் நற்செய்தி சொல்லும்படி சென்றது இயேசுவோட பிறப்பைச் சொல்ல சந்தோசமாய்ச் சென்றது தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா விண்ணில் ஒரு ஜோதி ஒன்று....... மலைகளிலே தாவிக்கொண்டு மாட்சி காணச் சென்றது மேகங்களின் மீதினிலே ஊர்வலமாய்ச் சென்றது வால் முளைத்த விண்மீனாய் வாழ்த்துப்பாடி சென்றது புல்லணைமேல் புனிதனையே புகழ்ந்து பாடி நின்றது தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா விண்ணில் ஒரு ஜோதி ஒன்று....... அலைகளிலே ஆடிக்கொண்டு ஆரவாரம் சென்றது ஆறுகளின் மீதினிலே ஆனந்தமாய்ச் சென்றது கானகத்தில் உற்சாக கானம்பாடிச் சென்றது விண்ணவனாம் இறைவனையே வணங்கி வாசல் நின்றது விண்ணவனாம் இறைவனையே வணங்கி வாசல் நின்றது தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தானே தந்தானே தந்தன தந்தனனா விண்ணில் ஒரு ஜோதி ஒன்று....... |