Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1482-  

விண்மின் தொண் மணி ஓசைகள் சொல்லிட
சிங்சிங் காரல் இன்னிசை கேட்டிட
மீட்பர் இயேசு பாலன் வருகை கிறிஸ்மஸ்
புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா- இந்த
பூமியில் வந்த எங்கள் இயேசுராஜா

நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக
பாலகனாய் தேவமைந்தன் வந்தாரே
குடையினில் நடந்திடும் கோடையில் இன்ப
அடைமழை பொழிவதுபோல்
மனமெனும் குடிலினில் விண்ணைப்போல் வானம் பூத்தாரே


நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையின் யுத்தம் - நம்
ஆண்டவர் மேல் விசுவாநம் உறுதியாக்கும் .............
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம்
உம்மைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப்பாடி மகிழ்வோம்
இயேசு நம் மீட்பர் நம்மை நாடி வருவாரே - நம்
இல்லம் காத்து குறைகள் யாவும் தீர்ப்பாரே


புன்னகையால் பூமியினை அழகாக்கும்
வேலைகளும் பசியாறும் நல்விருந்து......
மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் நேரம்
எங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா