கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | விண்மீனும் வானிலே நீந்துதே |
விண்மீனும் வானிலே நீந்துதே ஆண்டவர் வருகையை கூறுதே நம்மையும் அவ்விடம் சேர்க்குமே உலகமே ஒளிமயம் ஆகுமே உன்னதர் வருகையின் நேரமே அனைவரும் அவ்விடம் செல்லுவோம் ஆடுகள் மேய்ந்திடும் இடையர் முன்னிலே வெண்ணிற ஆடையில் தூதர் தோன்றியே (2) உலகத்தின் இரட்சகர் பிறந்ததைக் கூறவே அவர்களும் மகிழ்வுடன் தேடியே அரசர்கள் மூவரும் ஒன்று சேரவே தாரகை நோக்கியே தொடர்ந்து செல்லவே (2) மாட்டு தொழுவத்தில் தாரகை நிற்கவே அவ்விடம் அதிசயம் கண்டனர் பாலகன் இயேசுவின் பாதம் தன்னிலே பொன்னையும் பொருளையும் வைத்து வணங்கியே (2) மீட்பரும் இவரென அவர்களும் உணரவே ஆண்டவர் அவரை நாம் போற்றுவோம் |