கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | வானோரும் வாழ்த்த |
வானோரும் வாழ்த்த பாரோரும் போற்ற பாராளும் தேவன் இன்று பிறந்து விட்டாரே ஏரோது நடுங்க எருசலேம் கலங்க யூதரின் ராஜா இன்று பிறந்து விட்டாரே. கிழக்கினிலே விண்மீனை அன்று கண்டாரே விண்மீனை கண்டதினால் பயணம் கொண்டாரே விண்மீனும் வழிநடத்த தொடர்ந்து சென்றாரே அரண்மனையை கண்டதினால் அங்கு சென்றாரே அரசரையே அரண்மனையில் காண வந்தோமே அவருக்கு காணிக்கை செலுத்த வந்தோமே சேதி கேட்ட ஏரோது தந்திரம் செய்தான் கண்டு வந்து காரியத்தை சொல்லுங்கள் என்றான் வழிதவறிய ஞானிகளும் வருந்தி நிற்கவே வானத்திலே விண்மீனும் திரும்ப வந்தது பிள்ளை இருந்த வீட்டிற்கு அழைத்து சென்றது வெள்ளைப் போளம் தந்து அவரை பணிந்துகொண்டனர். |