கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | வானங்கள் பூவனமாய் |
வானங்கள் பூவனமாய் பூத்து குலுங்குதே மேகங்கள் ஊர்வலமாய் பாடி மகிழுதே பனியின் துளிகள் பவழ மணியாய் காண ஜொலிக்குதே இனிய பொழுதில் இதயம் மகிழ கானம் ஒலிக்குதே வாழ்த்து கூறுவோம் புதிய ஆண்டு பிறந்தது வாரும் மகிழுவோம் இறைவன் ஆசி நிரம்புது மானினமே மீனினமே மயிலினமே குயிலினமே சேதி கேளு புவியில் புதிய ஆண்டு பிறந்தது வானவராம் தூயவராம் வார்த்தை மனு ஆனவராம் வாழ்வு தரும் இறைவன் தந்த ஆசி நிரம்புது பூந்தளிரே தேன் சுனையே வயல்வெளியே மழைத்துளியே சேதி கேளு புவியில் புதிய ஆண்டு பிறந்தது ஏழைகளின் தோழனாக ஏதுமில்லா ராஜனாக ஏகசுதன் புவியில் தந்த ஆசி நிரம்புது |