Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் வானமே மகிழ்வாய்.  

தியானப்பாடல்:

1. வானமே மகிழ்வாய். பூமியே பூரிப்படைவாய். மலைகளே! ஆனந்தம் கொள்வீர்

2. மலைகள் இன்பம் பொழிவதாக. குன்றுகள் நீதியைத் தருவதாக.

3. ஏனெனில் வருவார் நம் ஆண்டவர் தம் எளியோர்மேல் இரக்கம் கொள்வார்.

4. வானங்களே! மேல் நின்று நீதிமானைப்போல் பெய்யுங்கள். மேகங்களும் நீதிமானைப் பொழிக! மாநிலம் திறந்து மீட்பரைப் பிறக்கச் செய்க!

5. ஆண்டவா! எங்களை நினைவு கூரும். உமது மீட்புடன் எம்மைக் காண வாரும்.

6. ஆண்டவா! எங்கள்மேல் கருணை காட்டி எம்மை ஈடேற்றும் சுவாமி.

7. உலகாளும் செம்மறிப்புருவையே பாலைவனப் பாறையினின்று சீயோன் மகளின் மலைக்கனுப்பிடும் சுவாமி.

8. வல்லபக் கடவுளாகிய ஆண்டவரே! எம்மை விடுவிக்க வாரும். உம்
திருமுகத்தைக் காட்டும். நாங்கள் ஈடேற்றம் அடைவோம்.

9. வாரும் ஆண்டவா! அமைதியில் எம்மைக்காண உத்தம உள்ளமுடன் உம்மைக் கண்டு களிப்போம்.

10. பூவுலகில் உம் திருவழிகளையும், எல்லா நாட்டினர் மத்தியில் உமது
இரட்சிப்பையும் கண்டறிவோம்.

11. வாரும் உமது வல்லமை எல்லாம் கொண்டு எம்மை மீட்டுக் காத்திடும் சுவாமி.

12. ஆண்டவா காலதாமதம் செய்யாமல் வாரும். உம் மக்களின் பாவக்கட்ட விழ்த்துத் தாரும்.

13. வானைப் பிளந்து எந்நாள் எந்நாள் இறங்கி வருவீரோ, உம் கனி முகத்தைக் கண்டாலோ, மலைகளும் உருகிப்பாயுமே.

14. வானோர்க்கு மேல் வீற்றிருக்கும் தேவா! வாரும் உம் முகத்தை எமக்கு  காண்பித்தருள்வீரே.

15. தந்தை, தனையன், தூய ஆவியானவர் மூவருக்குமே புகழ் உண்டாவதாக.

16. ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் முடிவில்லாக் காலமும்
உண்டாவதாக.








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா