கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | உள்ளக் குடிலில் பிறந்திடவே |
உள்ளக் குடிலில் பிறந்திடவே ஓடி வா பாலகா ஏங்கும் எங்கள் விழிகளிலே விடியல் நீயே பாலகா ஆநிரையின் தொழுவமதில் ஆச்சரியமாய் நீ பிறந்தாய் ஆகமத்தின் கூற்றுப்படி சாட்சியாக நீ மலர்ந்தாய் ஆண்டுகள் பல தேடினாய் அமைதியின் மன்னனே ஆதவனாய் இன்று கண்டோம் மாமரியின் மடியினிலே வாழ்வும் நீயே வழியும் நீயே உலகம் மகிழும் விடியல் நீயே போரிடும் இவ்வுலகினிலே பேரிடரில் மனிதம் வாழ மானுடத்தைக் காக்கும் படி மாணிக்கமாய் நீ பிறந்தாய் காரிருள் சூழ் வாழ்விலே நம்பிக்கையின் ஒளியிலே பேரொளியாய் வந்திடுவாய் கலங்கரையின் விளக்காக வாழ்வும் நீயே வழியும் நீயே உலகம் மகிழும் விடியல் நீயே |