கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | தூய நகராம் பெத்லேகேமில் |
தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும் நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே 1 மாமலையோரம் மாடடைக் குடிலில் மாதவன் மனுவானார் மாமரி மடியில் மன்னர் மன்னவன் மாண்புடன் கண்ணயர்ந்தார் மார்கழி மாதம் மயக்கும் குளிரில் மரியின் மனம் நெகிழ பார் புகழ் வேந்தன் பனியில் நடுங்கி பாசத்திற்கேங்கி நின்றார் தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும் நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே 2 தேனினும் இனிய தித்திக்கும் மொழியில் தேவனின் தூதர்களும் தேடியே வந்து வானகம் மகிழ பாலனை புகழ்ந்தனரே பூமியில் நல்மனம் உள்ளவர் யாவரும் சாந்தியுடன் வாழ ஏழையின் பாவம் நீக்கிட வந்தார் என்றே பாடி நின்றார் தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும் நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே 3 வானில் உதித்த தாரகை கண்டு ஆயரும் அரசர்களும் பொன்னிறை தூபம் ஏந்தியே வந்து பாலனை வணங்கி நின்றார் தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும் நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே நெஞ்சம் மகிழ்ந்திடவே |