கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | தேனீக்களின் கூட்டங்களே |
தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க? தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமே தேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம் தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள் லல லல லல லல லலா (2) தேவாதி தேவனை தேடி வந்த நாதனை ஆடியே பாடியே துதிப்போம் ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவை ஆடியே ஆடியே துதிப்போம் சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க? செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமே சின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம் செல்ல இயேசு பாலனோட செல்லங்களே நாங்கள் லல லல லல லல லலா (2) சின்ன ஆட்டுக் குட்டிகளே எங்கே போறீங்க? நல்ல மேய்ப்பன் இயேசுவோட நட்பைத் தேடி போறோமே சின்ன ஆட்டுக் குட்டிகளே நாங்களும் வாறோம் நல்ல மேய்ப்பன் இயேசுவோட கண்மணிகள் நாங்கள் லல லல லல லல லலா (2) வண்ணக்குயில் கூட்டங்களே எங்கே போறீங்க? வந்திருக்கும் இயேசுவுக்காய் பாட்டுப்பாட போறோமே வண்ணக் குயில் கூட்டங்களே நாங்களும் வாறோம் தங்க இயேசு பாலனோடு தங்கிடுவோம் நாங்கள் லல லல லல லல லலா (2) தேவாதி |