கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | தெய்வஆட்சி பூமியில் பிறந்தது |
தெய்வஆட்சி பூமியில் பிறந்தது தேடி நின்ற காலமும் கனிந்தது 2 பார்வையும் மலர்ந்தது பாதையும் தெரிந்தது வானளாவும் சக்தி உம்மில் மேவி நின்றது உன்னதத்தில் மாட்சியும் உள்ளமெங்கும் சாந்தியும் இந்நிலத்தில் பொங்கும் இந்த நாளிலே 2 அன்புச்சேவையில் ஆழ்ந்திடும் மனங்கள் ஆயிரம் தன்னலத்தையே தாண்டி வாழும் மேன்மை காண்கிறோம் - 2 தியாகம் செய்வதும் மாண்பைக் காப்பதும் நீதி நேர்மையில் வாழ்வமைப்பதும் பூமி வந்த தேவன் ஆட்சி தன்னைக் காட்டிடும் உண்மை சொல்லும் போதிலே நன்மை செய்யும் நாளிலே இன்பம் வந்து பொங்கிப் பாயும் பாரிலே 2 வறுமை நோய்களும் மூடத்தனத்தில் வாழும் வழிகளும் குறுமனங்களும் பொருளுக்காக மடியும் நிலைகளும் - 2 மாறும் என்பதை தீரும் வகையினை கூறும் நேரமே கூடி வந்ததே சேரும் மனிதர் யாவருக்கும் சக்தி வந்ததே இலட்சியத்திற்காகவே ஒன்று சேரும் போதிலே இறையளிக்கும் சக்தி நம்மில் கூடுதே |