கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சின்னஞ்சிறு குழந்தையாக |
ஆரிரராரோ ஆரிரராரோ ஆரிரராரோ சின்னஞ்சிறு குழந்தையாக - எங்கள் தேவன் பிறந்து விட்டார் அன்னைமரி மடியினிலே மழலையாய் தவழ்ந்து விட்டார் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவரும் பிறந்து விட்டார் அகிலத்தை மீட்டிடவே அவனியில் உதித்துவிட்டார் மண்ணகத்தில் தேவனுக்கு மாட்சி உண்டாகுக அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி உண்டாகுக ஆண்டவர் மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காய் தாவீதின் ஊரினிலே குழந்தையாய் பிறந்தாரே விண்மீன்கள் கண்சிமிட்ட பால் நிலா ஒளி வீச பாரினை மீட்டிடவே பரமன் பிறந்தாரே செய்தி கேட்ட இடையர்களும் ஆனந்தம் பொங்கிடவே ஆர்வமாய் புறப்பட்டோமே பெத்லேகம் விரைந்தனரே |