கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சின்னஞ் சிறு இயேசு பாலனே |
சின்னஞ் சிறு இயேசு பாலனே சிரிக்கும் இயேசு பாலனே 2 வண்ண வண்ண மலர்கள் தூவியே நான் வாழ்த்துச் சொன்னேன் இயேசு பாலனே... ஆராரோ... ஆரிராரோ... ஆராரோ... ஆராரோ... (2) நல்ல நல்ல கதையைச் சொல்லி நல்லாவே தூங்க வைப்பேன் மெல்ல மெல்ல தாலாட்டி மெதுவா தூங்க வைப்பேன் (2) ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரிராரோ... ஆராரோ... ஆராரோ... சின்ன கண்ணுமணி செல்லப் பொன்னுமணி - நல்ல தாலாட்டு நான் பாடி உறங்க வைப்பேனே (ஹோய்) கொஞ்சிக் கொஞ்சி நான் பேசி குறும்பா சிரிக்க வைப்பேன் விம்மி விம்மி அழுதாலும் விவரம் கேட்டிடுவேன் (2) ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரிராரோ... ஆராரோ... ஆராரோ... சின்ன ரோசாப்பூவே எங்க ராசா நீயே எங்க குலங்காத்து நலம் காக்க வேணும் பாலனே (ஹோய்) |