கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | செல்லப்பாலகா உன்னைப் பாடவா |
செல்லப்பாலகா உன்னைப் பாடவா அன்னை மடியில் கொஞ்சித் தவழும் - 2 அருமைச் செல்வமே ஆரிரோ ஆராரோ 2 முத்தங்கள் நான் தந்தேன் முத்துக்கள் நான் சூட்டி முல்லைச் சரமோடு சீராட்டவா (இடையிசை) வர்ணங்கள் நான் செய்து வாழ்த்துக்கள் நான் கொண்டு வாயார உன் புகழ் நான் பாடவா நெஞ்சிருக்கும் வரை நேசமெல்லாம் உனக்குத்தான் இதயமுள்ளவரை இன்பமெல்லாம் உன்னில் தான் உனைச் சொல்லச் சொல்ல நாவினிக்கும் பாடப்பாட மனமகிழும் காலங்கள் தோறும் என் காயங்கள் தான் தீர கண்மணி பாலன் நீ பிறந்தாய் (இடையிசை) எண்ணில்லா வரம் தந்து இணையில்லா அருள் தந்து இறைவா நீ இன்று மண்ணில் வந்தாய் நெஞ்சிருக்கும் வரை நேசமெல்லாம் உனக்குத்தான் இதயமுள்ளவரை இன்பமெல்லாம் உன்னில் தான் உனைச் சொல்லச் சொல்ல நாவினிக்கும் பாடப்பாட மனமகிழும் |