கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | புது சூரியன் இந்த இரவிலே |
புது சூரியன் இந்த இரவிலே உலகே வியக்கும் ஒளியிலே புது சந்திரன் நம் உருவிலே ஆனந்தம் நம் கையிலே எழுவோம் திருக்குலமே இறைவன் இயேசுவை வரவேற்போம் இணைவோம் ஒருகுலமாய் அன்பைக் கொண்டாடுவோம் சீயோனே ஜெருசலேமே நற்செய்தி உரைப்பவளே உயர் மலை மீது குரலெழுப்பு அஞ்சாதே என முழங்கு இவரே நம் மெசியா இவரால் மீட்பைக் கண்டோம் அதோ விண்ணில் மகிழ்ச்சி இதோ மண்ணில் அமைதி இன்பம் பொங்கும் பருவ வேளையில் பதிலளித்து உன் கண்ணீரைத் துடைத்திடுவார் விடுதலை நாளில் துணை நின்று உன் வெற்றிக்கு வழி வகுப்பார் இவரே நம் ஆயன் இவரின் ஆடுகள் நாம் அதோ விண்ணில் மகிழ்ச்சி இதோ மண்ணில் அமைதி இன்பம் பொங்கும் |