Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் பொன்னான நேரம்  
பொன்னான நேரம் - வெண்
பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார்
இயேசு பாலன்

பாவத்தின் சஞ்சலம் பறந்தோடிப்போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலூயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூமி வந்தார்
வல்லவர் வருகிறார் நம் மீட்பர் வருகிறார்
அல்லேலூயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம்

வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஒளியைப் பரப்பினீரே
இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து வழி நடத்துவார்
அல்லேலூயா பாடுவோம் மைந்தரை வாழ்த்துவோம்
அல்லேலூயா பாடுவோம் தெய்வ மைந்தரை வாழ்த்துவோம்









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா