கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | பாலகா உனக்கொரு பாட்டு |
பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதை கேட்டு ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் எனக்கு (2) அகஇருள் நீக்கிடும் ஒளியாய் என்னில் ஆறுதல் தந்திடும் மொழியாய் (2) விண்ணில் வந்த நிலவே என்னில் வந்த உறவே - 2 நீ வருவாய் இதயம் தருவேன் - 2 வாழ்வினை வழங்கிடும் உணவாய் - என்னில் தாழ்வினைக் களைந்திடும் உணவாய் (2) மண்ணில் வந்த இறையே என்னில் வந்த உறவே - 2 நீ வருவாய் இதயம் தருவேன் - 2 |