கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | ஒளி நிறைந்த அருள்விளக்கு |
தையர தையா... தையர தையா தையர தையர தைய் தர தையர தையா... தையர தையா தையர தையர தைய் ஒளி நிறைந்த அருள்விளக்கு உன்னதத்தில் தோன்றியது தையர தையா... தையர தையா இருள் நிறைந்த மனிதருக்கு இன்ப ஒளி வழங்கியது ஆ... ஆ... ஆ... தன்னானே தானானே தன்னானே தானானே (2) ஆ... ஆ... ஆ... இலை மறைந்த கனிபோலே இறைவனிடம் நிலவியது அலை நிறைந்த கடல்மேலே அமைதியென உலவியது மலர்போன்ற முகத்துடனே மங்கை என மாறியது மரி என்னும் பெயருடனே மண்ணகத்தில் ஏறியது தையர தையா... தையர தையா தையர தையர தையரரா கண்மணிபோல் கண்இமையை கலக்கமின்றி காத்துவந்தாய் விண்ணவனின் வேண்டுதலால் விருப்பமுடன் தாள்பணிந்தாள் கடவுளுக்கு உரு கொடுத்து கன்னிமையில் தாயானாய் உடன் இருந்து இறைவனிடம் உயிர் அளிக்கும் துணையானாய் புதுயுகத்தின் பெண்மையென யுகமதிலே விளங்கியவள் விடுதலையின் முழுமையினால் விண்மீனாய் துலங்குபவள் கருணையிலே மனிதருக்கு அருள் பொழியும் கன்னியவள் இருதயத்தின் இரக்கத்தினால் அனைவருக்கும் அன்னையவள் |