கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | நெஞ்சமே நெஞ்சமே |
நெஞ்சமே நெஞ்சமே ஆண்டவரை நீ போற்றிடுவாய் உயிரில் கீதம் உறவில் தாளம் உள்ளம் இசைக்க பாடிடுவாய் வாழ்வும் அவரே வளமும் அவரே வழித்துணையாகும் வள்ளலும் அவரே ஆனந்தம் அவர் பாதம் பேரானந்தம் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே நீதியும் நேர்மையும் ஆனவர் அவரே பசித்திருப்போர்க்கு உணவளிப்பவரே சிறைப்பட்டோரை விடுவிப்பவரே ஆனந்தம் அவர் பாதம் பேரானந்தம் அன்பும் அருளும் ஆனவர் அவரே அமைதியின் மறுவுருவாய் இருப்பவரே நேரிய மனத்தின் நேசம் அவரே நம் நெஞ்சினில் வாழும் தீபமும் அவரே ஆனந்தம் அவர் பாதம் பேரானந்தம் |