கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் |
கபசி சரிக ம ப த நி சரிக ரிரிச கபம பதநிரிச கரிக சரி ரிசரி நிசக கரிசநி தபமப கநிசரி கத ரிரி சநி தப நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா பெத்லேகம் ஊரில் மாடடையும் குடிலில் மாமரியின் மடியில் மாவளனின் கரத்தில் பாருலகோரே ஆண்டவர்க்கு - இங்கு புதியதோர் பாடல் பாடிடுங்கள் அவர் பெயர் சொல்லி போற்றிடுங்கள் - என்றும் அவர் மீட்பை நாள்தோறும் கூறிடுங்கள் அவர் மாட்சி எங்கும் அறிவியுங்கள் அவர் மீட்பை எங்கும் தெரிவியுங்கள் அவர் தானே தெய்வம் வணங்கிடுங்கள் பத பம பத பமகரிச (Music) சரிக ரிசரி ரிசரி சநித நிசரி தாநித பகபம பகபம பதநிச கசநிநிச விண்ணுலகம் மகிழ்வதாக - இம் மண்ணுலகம் எங்கும் களிகூர்வதாக ஆழ்கடலும் ஆர்ப்பரிக்க - அதில் வாழ்வன யாவும் வாழ்த்திசைக்க வயல்வெளி மலர்கள் களிகூரட்டும் வனம் காணும் மரங்கள் மகிழ்ந்தாடட்டும் உண்மையும் நீதியும் நிறைந்தேறட்டும் |