Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் நமக்காய் ஒரு குழந்தை  


நமக்காய் ஒரு குழந்தை - இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன்
ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ.

வானின் தூதர்களே இன்று வாழ்த்துப் பாடுங்களே
விண்ணகத்தில் என்றும் மகிமைதான் - ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே (2)
மாடடை குடிலில் பிறந்தவனே - இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
ஆடுகளே மாடுகளே - நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே.

மாந்தர் மைந்தர்கள் யாம் - எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று - முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு (2)
மனிதனாய் பிறந்த இறைமகனே - எங்கள்
மாண்பினை எமக்குக் கூறாயோ
வறுமை நோய் பிளவுகள் - இனி
வராதிருக்கச் செய்யாயோ.





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா