கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மின்னும் நட்சத்திர ஒளிபோல் |
மின்னும் நட்சத்திர ஒளிபோல் மன்னன் வந்தாரே வெள்ளை மலைகளில் பனிபோல் பாலன் வந்தாரே கட்டுகளை உடைத்திட பாவங்களை கழுவிட சத்துருவை ஜெயித்திட சாபங்களை நொறுக்கிட பரமன் பிறந்தாரே நமக்காய் வான தூதர் பாடினாரே விண்ணில் மகிமையே நாமும் சேர்ந்து பாடுவோமே மண்ணில் சமாதானம் விண்ணில் மகிமையே மண்ணில் சமாதானம் பரமன் பிறந்தாரே நமக்காய் ஆட்டு மேய்பர் வந்தனரே பயங்கள் பறந்ததே நாமும் இன்று பாடுவோமே ஜெயமே இயேசுவே பயங்கள் பறந்தன ஜெயமே இயேசுவே பரமன் பிறந்தாரே நமக்காய் |