கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மீட்பர் பிறந்த நாளிது |
மீட்பர் பிறந்த நாளிது விரைந்து வாருங்கள் மகிழ்ந்து கீதம் பாடுவோம் இணைந்து கூடுங்கள் விண்ணும் மண்ணும் இணைந்ததே மீட்பின் ஒளி பிறந்ததே தந்தை அன்பின் பாலனாய் பாவம் போக்க வந்ததே விடியலாகும் நமது வாழ்வு என்றுமே வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன் வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் - 2 வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய் என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே.. (இடையிசை) வாக்கு மண்ணில் மனிதரானார் சொந்தமாய் என்றுமே இம்மானுவேலாய் நம்மிலே.. போரும் பகையும் சூழ்ந்த இந்த உலகமே வாரும் அமைதி காண அவர் பாதமே - 2 வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன் வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் Happy Christmas Happy Christmas Merry Christmas Merry Christmas மாட்டுக் கொட்டில் போதுமென்று ஏழையாய் கண்ணுறங்கும் வானமுதின் காட்சியே (இடையிசை) மாட்டுக் கொட்டில் போதுமென்று ஏழையாய் கண்ணுறங்கும் வான் அமுதின் காட்சியே பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகமே வாழ்வு தரும் உணவைக் காண வாருமே வாழ்வும் வழியும் ஒளியுமான பாலகன் வாசல் வந்து நம்மைக் காக்கும் இறைமகன் |