கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மார்கழி குளிரில் ஒளிர |
மார்கழி குளிரில் ஒளிர மன்னவன் இயேசு பிறந்தார் வாருங்கள் பாருங்கள் வாழ்த்திப் பாடுங்கள் மாட்டுத் தொழுவில் பிறந்தார் மரியின் மடியில் தவழ்ந்தார் வணங்கிட வாருங்கள் வாழ்த்திப் பாடுங்கள் ஆண்டவர் பிறந்தார் ஆள்பவர் பிறந்தார் அவர் பதம் தொழுவோம் வாருங்கள் மாபரன் பிறந்தார் மீட்பவர் பிறந்தார் பாடி மகிழ்வோம் வாருங்கள் அதோ விண்மீன் தோன்றிடவே ஞானிகள் அவரைக் கண்டனரே அன்றே தூதரும் தோன்றினரே இடையரும் மகிழ்ந்தனரே கடவுளின் வார்த்தை மனுவுரு ஏற்றார் திருமுகம் காண வாருங்கள் பொன்னும் பொருளும் போளமும் அன்று ஏற்றவரை இங்கு காணுங்கள் இயேசுவே பாலனே வாருமே பாருமே இயேசுவே கன்னிமரியின் மகனே பாலனே இறையருளின் வடிவே வாருமே எம் மனங்களில் உறைய பாருமே பனி சூழ்ந்த இரவினிலே இருளினை அகற்றும் ஒளியெனவே மகவாய்த் தோன்றிய மாபரனே மீட்பின் காரணனே மூவொரு இறைவன் நம்மிடை எழுந்தார் இதயத்தில் ஏற்போம் வாருங்கள் புவிதழ் விரித்து புன்னகை அணிந்து அணைத்திட அழைக்கின்றார் வாருங்கள் இயேசுவே பாலனே வாருமே பாருமே இயேசுவே கன்னிமரியின் மகனே பாலனே இறையருளின் வடிவே வந்தோமே உம் திருமுகம் காண பாருமே |