கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மண்ணும் விண்ணும் இணைந்தது |
மண்ணும் விண்ணும் இணைந்தது இந்த நாளிலே மனிதம் புனிதமானது இந்த நாளிலே கண்கள் மீட்பைக் கண்டது இந்த நாளிலே கர்த்தர் இயேசு குழந்தையாய் பிறந்த நாளிலே Christmas Merry Christmas பாட்டுப் பாடுவோம் Christmas Happy Christmas வாழ்த்துக் கூறுவோம் தாவீதின் ஊரில் பிறந்த உலகின் மீடட்பரே தாகத்தை தணித்திடும் ஊற்றுத் தண்ணீரே தாழ்நிலை மக்களை உயர்த்தும் தலைவரே தாலேலோ பாடுவோம் எங்கள் விடியலே Christmas Merry Christmas பாட்டுப் பாடுவோம் Christmas Happy Christmas வாழ்த்துக் கூறுவோம் நேர்மையின் வேந்தரே நேசக் கர்த்தரே ஆவியாலே பிறந்து உலகை ஆட்சி செய்பவரே பாவத்தைப் போக்கிடும் உலகின் செம்மறியே பகைவரை வீழ்த்திடும் விண்ணகப் பேரொளியே Christmas Merry Christmas பாட்டுப் பாடுவோம் Christmas Happy Christmas வாழ்த்துக் கூறுவோம் |