கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மண்ணில் வந்த விண்ணின் |
ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ (2) மண்ணில் வந்த விண்ணின் மணியே தெய்வ கன்னி தந்த தங்க நிலவே மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே என் நேரில் வந்த தெய்வ மகனே - (2) ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ (2) வான் மேகமே வான் மேகமே வந்திங்கு கூடுங்களே சேய் போலவே வான் தேவனே வந்திங்கு பிறக்கின்றாரே மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா மண்ணில் துன்பம் போக்கும் ராஜா அமுதமே என் செல்லமே அற்புத குழந்தை இயேசுவே - (2) ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ (2) வான் தூதரே வான் தூதரே வந்திங்கு பாடுங்களே நான் பாடவே தேன் கானமே தந்திங்கு போற்றுங்களே கருணை வடிவில் வளர்ந்த ரோஜா பண்பில் அகிலம் போற்றும் ராஜா பாலனே என் வேந்தனே அற்புத குழந்தை இயேசுவே - (2) ஆராரோ ஆரீரரோ....ஆராரோ ஆரீரரோ (2) |