கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மண்ணில் மகனாய்ப் பிறந்தார் |
மண்ணில் மகனாய்ப் பிறந்தார் மனிதம் மலர்ந்திடச் செய்தார் உறவின் வடிவில் வந்தார் உலகின் விடியலாய் எழுந்தார் அவரே இயேசு குழந்தை இயேசு அன்பும் அவரே அருளும் அவரே ஏழைகள் வாழும் குடிசையில் பிறந்து ஏழைத் தோழனாய் வந்தார் மாண்புகள் இழந்த மனிதரின் வாழ்வில் மானிட மகனாய் உதித்தார் அவர் விடுதலை குரல் கொடுத்தார் - மண்ணில் அடிமை விலங்கினை உடைத்தார் சென்றிடுவோம் அவர் வழியில் செய்திடுவோம் அவர் பணியை ஏற்றத்தாழ்வுகள் மலிந்திட்ட உலகின் மாற்றும் ஆற்றலாய் எழுந்தார் விடியல் தேடிடும் மனித உள்ளங்கள் விடிந்திட வழி செய்தார் அவர் உண்மைக்கு குரல் கொடுத்தார் - மண்ணில் இறைவன் ஆட்சியை விதைத்தார் சென்றிடுவோம் அவர் வழியில் செய்திடுவோம் அவர் பணியை |