கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மனிதரும் மனிதனும் இணைகையிலே |
மனிதரும் மனிதனும் இணைகையிலே மானுடம் இறைவனைப் புகழுதம்மா மனிதனை மனிதன் வெறுக்கையிலே தெய்வம் மனிதனில் மறையுதம்மா குறைபடும் மனிதம் விழிக்கையிலே நீதியின் குரல்கள் கேட்குதம்மா அதுவே இறைவனின் குரலல்லவோ -- அதைக் கேட்பது யேசுவின் பிறப்பல்லவோ அதுவே நம் சமயம் அதுவே நம் உதயம் உறவுகள் விரிந்திட உழைத்திடுவோம் இறைமையை மண்ணில் மலரச் செய்வோம் பிறப்பால் இணைந்தவர் எவருமில்லை அதை மதித்தே வாழ்வது மனிதம் என்போம் அதுவே நம் சமயம் அதுவே நம் உதயம் (2) மனிதரின் உரிமைகள் காத்திடுவோம் மனிதனாய் வாழ்ந்திட உழைத்திடுவோம மனிதனுக்கருளும் அன்பினிலே கடவுளைக் கண்டிட முயன்றிடுவோம் அதுவே நம் சமயம் அதுவே நம் உதயம் (2) |