கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மணிகள் தொனிக்குதே |
மணிகள் தொனிக்குதே பிணிகள் தணியவே மண்ணில் விண்ணவன் துணியில் பணிகின்றார் அன்று பேசும் வானவர் போலே இன்று கோவில் மணிகள் தொனிக்குதே சென்று பாரீர் குகையில் பாலனை நின்று வணங்கி ஆசீர் பெறுவீரே மாடடைக்குடிலின் நடுவிலே மாமரியாள் துணியில் சுற்றியே மாதவனாய் தேவன் பணிகின்றான் மானிடர் அடையாம் இதோ தேவதூதர் கூறும் பாலனை தேடி ஆயர் அதிசயம் கொண்டே சூசைமரியோடு யேசுவை நேசமாய்கண்டே மகிழ்ந்தாரே மாதா நடந்ததெல்லாம் எண்ணியே மகிழ்வுடன் பேர் மௌனம் காத்தாரே பேசரும் பேர் புதுமையென்று தன் பரனைக் கண்டு பரவசம் கொண்டார் ஆதாம் ஏவை பாவம் போக்கவே ஆவிதேவன் வல்ல வரமதால் அமல அன்னை உதரம் தேடிய அமரர் நாதன் புவியில் பிறந்தாரே |