கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மலரே எமக்காக |
மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ குளிரில் அன்னை மரி மடியில் விண்தூதர் சேனைகள் துதி பாடிட மலர்ந்தாயே இம்மானுவேலாய் மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ குளிரில் அன்னை மரி மடியில் நடு இரவில் கடும் குளிரில் மேய்ப்பர்க்கு நற்செய்தி தூதர் சொன்னார் மானிடரைக் காப்பதற்கு இறைவன் மனிதனாய் பிறந்தார் இன்று விண்ணிலே தேவனுக்கே மகிமை பூமியிலே மெய் சமாதானம் மானிடர்மேல் பிரியமென்று பாடியே தூதர் மறைந்தாரே மேய்ப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்தார் மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ குளிரில் அன்னை மரி மடியில் வானத்திலே வீண்மீனை கண்டே ஞானிகள் வந்தனரே பூவுலகின் மீட்பர் இவர் என்றே போற்றிப் புகழ்ந்தனரே பொன்போள தூபவர்க்கத்தையும் காணிக்கையாகப் படைத்தனரே விண் ஆளும் தேவ மைந்தனையே கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனரே நாமும் சென்று அவர் பாதம் தொழுவோம் மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ குளிரில் அன்னை மரி மடியில் விண்தூதர் சேனைகள் துதி பாடிட மலர்ந்தாயே இம்மானுவேலாய் மலரே எமக்காக இப்பூவில் மலர்த்தாயோ குளிரில் அன்னை மரி மடியில் |