Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் மகிழ்ந்து பாடிடுவோம்
ஈராயிரம் வயது இயேசுவுக்கு
உலகில் தினம் தினம் பிறக்கும் இயேசு பாலனுக்கு

மகிழ்ந்து பாடிடுவோம் இணைந்து ஆடிடுவோம்
மாந்தரெல்லோரும் பகிர்ந்து கொண்டாடுவோம்
Happy Christmas  Happy Newyear

உலகை நேசிக்கின்ற உன்னத தேவனவர்
தமது மகனையே மீட்பராக அனுப்பி வைத்தார்
அவரை நம்பிடுவோம் வாழ்வைத் தந்திடுவார்
அதுவே அருளாகும் அன்பிறைவன் செயலாகும்
கடவுளின் அன்பு குழந்தையாகத் தவழுவதைப் பாருங்கள்
கனிவுடன் எம்மை பார்த்துப் பார்த்து புன்னகைப்பதைப் பாருங்கள்
இன்பத்தில் துணையிருப்பார் இன்பத்தில் இணைந்திருப்பார்
உறவிலே மகிழ்விலே வாழ்வளிப்பார்

வானத்தைக் கடந்த மகன் பாரத்தில் பிறப்பெடுத்தார்
அதனை முன்பு என்றும் பின்பு என்றும் வகுத்துவிட்டார்
பாலனைச் சந்திக்கின்றோம் வாழ்வினைச் சிந்திக்கின்றோம்
பாரில் போலியினை கடைந்து உம்மை பேணிடுவோம்
இறப்பை எல்லாம் புனிதமே என்ற நிலை காணுங்கள்
இகத்தின் மாந்தர் இயேசுவின் சகோதரர் பாருங்கள்
காலம் கனிந்ததுவே கனவுகள் பலித்ததுவே
கடவுளும் மனிதரும் இணைந்திடுமே



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா