கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | மாடடை குடிலின் மன்னவனே |
மாடடை குடிலின் மன்னவனே மாளிகை துறந்த முன்னவனே மார்கழி பனியின் சித்திரமே மாசின்றி பிறந்த பொக்கிஷமே பெத்தலை நகரின் இரத்தினமே நித்திய இறைவன் புத்திரனே கண்ணே கனியே கண்மணியே பொன்னே பொருளே பூந்தளிரே ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரிரோரா ஆரிராரிரோரா ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோரா காரிருள் சூழ்ந்த வேளையிலே கானகம் தோன்றிய பேரொளியே மாதவம் புரிந்த மாந்தருக்காய் மானுடம் தரித்த மாபரனே யாருமே இல்லை என்போர்க்கு யாவுமாய் வந்த நம்பிக்கையே அன்பே அமுதே ஆருயிரே முத்தே மணியே மாணிக்கமே ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ முத்தே மணியே மாணிக்கமே ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரிரோரா ஆரிராரிரோரா ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோரா வாழ்வினை தாங்கும் வார்த்தையிங்கே வானத்தை தாண்டியே பூமியிலே தாகங்கள் அகலும் நீர்சுனையே சோகங்கள் விலக நீர் துணையே தேற்றிடும் அன்பு என்றாலே தேங்கிடும் நெஞ்சம் உன் வசமே பட்டே பூவே பால் நிலவே சிட்டே தேனே கார்முகிலே ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரி ஆரிராரிரோ ஆரிராரிரோரா ஆரிராரிரோரா ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோரா |