Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் தூய நகராம் பெத்லேகேமில்  


1

தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே

1 மாமலையோரம் மாடடைக் குடிலில் மாதவன் மனுவானார்
மாமரி மடியில் மன்னர் மன்னவன் மாண்புடன் கண்ணயர்ந்தார்
மார்கழி மாதம் மயக்கும் குளிரில் மரியின் மனம் நெகிழ
பார் புகழ் வேந்தன் பனியில் நடுங்கி பாசத்திற்கேங்கி நின்றார்

தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே

2 தேனினும் இனிய தித்திக்கும் மொழியில் தேவனின் தூதர்களும்
தேடியே வந்து வானகம் மகிழ பாலனை புகழ்ந்தனரே
பூமியில் நல்மனம் உள்ளவர் யாவரும் சாந்தியுடன் வாழ
ஏழையின் பாவம் நீக்கிட வந்தார் என்றே பாடி நின்றார்

தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே

3 வானில் உதித்த தாரகை கண்டு ஆயரும் அரசர்களும்
பொன்னிறை தூபம் ஏந்தியே வந்து பாலனை வணங்கி நின்றார்

தூய நகராம் பெத்லேகேமில் தேவ பாலகனும்
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே
நேயமுடனே அவதரித்தார் நெஞ்சம் மகிழ்ந்திடவே
நெஞ்சம் மகிழ்ந்திடவே


2

மணிகள் தொணிக்குதே பிணிகள் தணியவே
மண்ணில் விண்ணவர் துணியில் பணிகின்றார்

1 அன்று பேசும் வானவர் போலே
இன்று கோவில் மணிகள் தொணிக்குதே
சென்று பாரீர் குகையில் பாலனை
நின்று வணங்கி ஆசிர் பெறுவீரே

மணிகள் தொணிக்குதே பிணிகள் தணியவே
மண்ணில் விண்ணவர் துணியில் பணிகின்றார்

2 மாடடைத் தொழுவம் தன்னிலே
மாமரியாள் துணியில் சுற்றியே
மாதவராம் தேவர் பணிகின்றார்
மானிடர்கடையாளம் இதோ!

மணிகள் தொணிக்குதே பிணிகள் தணியவே
மண்ணில் விண்ணவர் துணியில் பணிகின்றார்

3 ஞானியரும் இயேசு பாலனை
தேடினார் அதிசயம் கொண்டே
பொன் தூபம் வெள்ளை போலமும்
காணிக்கையாய் பணிந்து தந்தனரே!

மணிகள் தொணிக்குதே பிணிகள் தணியவே
மண்ணில் விண்ணவர் துணியில் பணிகின்றார்

3

எல்லோரும் வாருங்களே ஒன்றாக கூடுங்களே
நல்லோனைப் பாடுங்கள் நன்றாகப் பாடுங்கள்
முல்லைப்பூ மொட்டுக்களே - நல்ல
அல்விப்பூ ஆள்ளுங்கள் அவர் பாதம் சூடுங்கள்
கைகொட்டிப் பாடுங்களே - 2
Joy... Joy....Joy... Joy... Joy... Joy...joyful Christmas day
Re...re...re...re...re...re... rejoicing Christmas Day
Ha...ha...ha...ha...ha...ha...happy Christmas day
Ho...ho...ho...ho...ho...ho...holy Christmas day



1 வேப்பம்பூ மாலைகள் வேந்தர்க்கு சூடுங்கள்
மீனாட்டின் செல்வங்களே - எங்கள்
மீனாட்டின் செல்வங்களே
வஞ்சிப்பூ சூடுங்கள் வாகைப்பூ தேடுங்கள்
முல்லைப்பூ மொட்டுக்களே - நல்ல
அல்லிப்பூ அள்ளுங்கள் அவர் பாதம் சூடுங்கள்
கைகொட்டிப் பாடங்களே - 2
Joy... Joy....Joy... Joy... Joy... Joy...joyful Christmas day
Re...re...re...re...re...re... rejoicing Christmas Day
Ha...ha...ha...ha...ha...ha...happy Christmas day
Ho...ho...ho...ho...ho...ho...holy Christmas day



2 இதயங்கள் மகிழட்டும் இல்லங்கள் ஒளிரட்டும்
உள்ளங்கள் ஒன்றாகட்டும் - நம்மில்
உறவுகள் வளர்ந்தோங்கட்டும்
மணம் வீசும் சோலையில்
மலர் நாடும் வண்டைப்போல்
மரிபாலன் காணுங்களே - அவரில்
மனசாந்தி அடைவோம் மறுவாழ்வில் மகிழ்வோம்
மகிழ்வோடு இல்லம் செல்வோம் -2
Joy... Joy....Joy... Joy... Joy... Joy...joyful Christmas day
Re...re...re...re...re...re... rejoicing Christmas Day
Ha...ha...ha...ha...ha...ha...happy Christmas day
Ho...ho...ho...ho...ho...ho...holy Christmas day



3 மணம் வீசும் சோலையில்
மலர் நாடும் வண்டைப்போல்
குடில் தேடி வாருங்களே - குழந்தை
யேசுவைக் காணுங்களே
பாலர்கள் நாம் கூடி பக்தியாய் பண்பாடி
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் - இங்கே
புத்தாடை மின்னுது வெடிச்சத்தம் முழங்குது
நம் பாலன் பிறக்கையிலே - 2
Joy... Joy....Joy... Joy... Joy... Joy...joyful Christmas day
Re...re...re...re...re...re... rejoicing Christmas Day
Ha...ha...ha...ha...ha...ha...happy Christmas day
Ho...ho...ho...ho...ho...ho...holy Christmas day


4

1 மனோ மகிழ்வோடு
அனைவரும் வாரும்
வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு
பாருங்கள் தேவ தூதரின் இராஜாவை

வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே பாலனை

2 மந்தையை விட்டேதான்
மாட்டு தொட்டில் நோக்கி
வந்து இடையர்கள் வணங்கினர்
சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்

வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே பாலனை

3 அநாதி பிதாவின் அநாதிச் சுடரை
மனித வேஷமாகக் காணுவோம்
துணிகளாலே சுற்றிய பாலனை

வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே
வாரும் வணங்குவோமே பாலனை




5

ஞானியர் மூவர் கீழ்தேசம்
விட்டு வந்தோம் வெகுதுாரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்


ஓ...ஓ... இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்



1 பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே - ஓ...ஓ...


2 வெள்ளை போளம் நான் தந்தேன்
கொண்டு வந்தேன் கடவுளே
அஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே - ஓ...ஓ...


3 தூப வர்க்கம் நான் தந்தேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன் - ஓ... .ஓ...



6

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய், மன்னவனே துயிலாய் ~ 2

அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு ~ 2
இறைவன் கொண்ட துறவு நம் இதயம் வென்ற உறவு

ஆரிராராரோ அரிராரிராராரோ ஆரிராராரோ

அன்பெனும் மலர்விரித்து அருளெனும் மணம் விடுத்து
இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய், மன்னவனே துயிலாய் ~ 2

தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்து
விண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய், மன்னவனே துயிலாய் ~ 2



7

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி துதி மனமே ~ இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றி துதி மனமே

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் 2
இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் 2
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் 2
இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் 2

குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி மனமே ~ இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி மனமே

2. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக 2
இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே 2
இவ்வளவாய் அன்பு வைத்த எம்பெருமானை 2
நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே 2

குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோ

தூங்கு தூங்கு பாலா நீ - 2



8

ச்சும் ச்சும் ச்சும் ச்சும் ச்சும் ச்சும் ச்சும் ச்சும்
வாசல் தோறும் வண்ணக்கோலம்
சின்ன சின்ன மெழுகு தீபம்


விண்ணை ஆளும் மன்னம் மழலை வடிவிலே
நம்மை மீட்க தேவன் வந்தார் மண்ணிலே
அன்னை மாதா மடியில் தவழும் பாலனே
விண்ணோர் போற்றும் தெய்வம் இயேசு ராஜனே
கிறிஸ்மஸ் தாத்தா வருவாரே
அன்பு பரிசு தருவாரே லல்ல லல்ல லலல..



1 பூஞ்சிட்டாய் பாடத்தான் கிறிஸ்மஸ் திருவிழா
ராகங்கள் பாடத்தான் இந்த திருவிழா
அன்பாய் கீதம் பாடலாம் தம்பி ஓடிவா
ஒன்றாய் சேர்ந்தே ஆடலாம் தங்கை ஓடிவா
கிறிஸ்து பிறந்தாரே லல்ல லல்ல லல்ல....



2 கடும் குளிரில் முன்னிலையில் பாலன் துயில்கிறார்
முல்லைப்பூ சிரிப்பினிலே என்னை அழைக்கிறார்
பொன்னும் பொருளும் தேவையில்லை உள்ளம் கேட்கிறார்
உள்ளத்தை சந்தித்தால் பிறந்திடுவார்
கிறிஸ்மஸ் திருநாளில் லலல லல்ல லல்ல.



9

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் ~ பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் ~ பிறந்தார்

3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் ~ பிறந்தார்

10

பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் பம்

வா வா என்றழைத்தார்கள் பா ரம்ப பம் பம் ~ பம் பம்
அரசன் பிறப்பைக் காண ரம்ப பம் பம் ~ பம் பம்
பரிசொன்று அவருக்கு கொடுக்க ரம்ப பம் பம் ~ பம் பம்
மன்னன் முன் காணிக்கையாக ரம்ப பம் பம் ரம்ப பம் பம்
ரம்ப பம் பம் ~ பம் பம்
மன்னனை மகிமை படுத்த ரம்ப பம் பம் ~ பம் பம்
அவர் வருகையிலே!

பாலனே மன்னனே பா ரம்ப பம் பம் ~ பம் பம்
நானொரு சின்னக் குழந்தை ரம்ப பம் பம் ~ பம் பம்
மன்னர்க்கு உகந்ததாக ரம்ப பம் பம் ~ பம் பம்
பரிசொன்றும் என்னிடமில்லை ரம்ப பம் பம் ரம்ப பம் பம்
ரம்ப பம் பம் ~ பம் பம்
இன்னிசை மீட்டிடவோ நான் ரம்ப பம் பம் ~ பம் பம்
என் மத்தளத்தில்

மரியாள் தலையசைத்தாள் பா ரம்ப பம் பம் ~ பம் பம்
விலங்கினங்கள் தாளம் போட்டன ரம்ப பம் பம் ~ பம் பம்
என் மத்தளம் இசையை முழங்கிட ரம்ப பம் பம் ~ பம் பம்
என்னாலே இயன்றதை இசைத்தேன் ரம்ப பம் பம் ரம்ப பம் பம்
ரம்ப பம் பம் ~ பம் பம்
சின்ன பாலன் சிரித்தார் ரம்ப பம் பம் ~ பம் பம்
நான் இசை முழங்கிட

11

கிறிஸ்து பிறந்தார் ~ 3
நம்மை மீட்க மண்ணில் அவர் உதித்தார்

கிறிஸ்து பிறந்தார் ~ 3
நம்மை மீட்க மண்ணில் அவர் உதித்தார்

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூற வந்தோம் ~ 3
எங்கள் உள்ளங்களில் இருந்தே


12

உள்ளங்களே இல்லங்களே செய்தி கேளுங்கள்
உவகைதரும் காலம் இது பாடி மகிழுங்கள்

தாவீதின் ஊரிலே ஏழ்மையின் உருவிலே நமக்காக மீட்பர் பிறந்தார் - 2


காலம் காலமாய் கண்கள் பூத்துப்போனது
கருணை தெய்வம் இங்கு கண்ணில் தெரிந்தது
வேக வேகமாய் கால்கள் அங்கு சென்றது
ஏழைக் குடிலினில் நம் தெய்வம் தவழ்ந்தது
ஈராயிரம் ஆண்டாயினும் மீட்பதன் வருகை தொடரும்



நீதி உண்மைகள் கானல் நீராய் ஆனது
பாலை வெளிகளாய் இதயம் என்றும் வாழுது
அன்பின் விழுதுகள் நெஞ்சம் வாழும் கரும்புகள்
விலங்கை உடையுங்கள் புது உலகை காணுங்கள்
நூறாண்டுகள் வாழ்வாயினும் மீட்பதன் பணியிதுதான்


13

ஆரிராரிரோ என் கண்ணே நீ துாங்கு
என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ துாங்கு - 2



அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா - உன்
ஆன்மீக ராகங்கள் உயிர்வாழவே
என்னில் இசைபாடவா
கண் இமைமூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடிவா...
அருள் கோடி தா - ஆரிராரிரோ



அமுதாக ஆன்மாவில் வருகின்றவா
என்னை உருவாக்க வா - நல்
அணையாக தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளி யேற்றுவேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடிவா...
அருள் கோடி தா - ஆரிராரிரோ



14

பனிவிழும் இராவினில் கடும்குளிர் வேளையில்
கன்னி மரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே - 2
இராஜன் பிறந்தார், பிறந்தார் - 2
நேசர் பிறந்தாரே 2



மின்னிடும் வானகத் தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன் வழிகாட்டி சென்றதுவே
பாலனை கண்டு பணிந்திடவே 2
மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் இரட்சகரை - பனிவிழும்
மகிமையில் தோன்றய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தருக்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே 2
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை - பனிவிழும்


15



நம்தனனான நம்தனனான நம்தனனான னா - 4
குழந்தையே எங்கள் செல்வமே என்னில் வாருமே
நாளுமே எங்கள் ஜீவனில் கலந்தாள வாருமே
இதயம் உமக்குத் தானே... எந்தன்
இறைவன் உமக்குத் தானே... - 2



மழலை சொல்லி மனத்தின் சுமையை
மறக்க வைத்தாயே
மாசுப்படிந்த மனிதர் எம்மை
மன்னித்து அழைத்தாயே
தேய்ந்த மனதை தேற்றியே தேவா வாருமே
நாடிவா என்னைத் தேடிவா தேற்றவாருமே
குழந்தை இயேசு தேவா - நம்தனனான



அன்பு சொல்லில் அமுத சிரிப்பில்
ஆனந்தம் தந்தாயே
அலையும் மனதில் அமைதி தந்து
அருளை அளித்தாயே
வாடும் மனிதர் உலகிலே வாழ்வை தாருமே
நாடிவா என்னை தேடிவா தேற்றவாருமே
குழந்தை இயேசு தேவா - நம்தனனான



16

நான் பாடுவேன் வா இறைவா
ஆனந்தமே நீ... தர... வா
Bamchic Bamchic Ba Bam Bam - 3
Ra bam Bam Bam Bam



பரலோகம் ஆளும் நம் தேவன்
இகலோக மாந்தரின் ஜுவன்
மாசில்லா ஜென்மமானார்
மாபெரும் மீட்பரானார் - 2
பரமபிதா பாலகனாய் பிறந்த நாளிதுவே
பூவுலகம் ஸதோதரிக்கும் கிறிஸ்துமஸ் நாளிதுவே
Bamchic Bamchic Ba Bam Bam
Ra bam Bam Bam Bam - 3



வானின் விண்மீனும் எழுந்ததே
மண்ணில் பொற்காலம் பிறந்ததே - 2 ஒஒஒ
பெத்தலகேமிலே மாட்டுத்தொழுவிலே
இயேசு பாலன் உதித்தார்
நற்செய்தி கேளுங்கள் பொற்பாதம் நாடுங்கள்
வேதவாக்கு நிறைவேற வந்த
இறை இயேசு பாதம் பணிவோம்
Bamchic Bamchic Ba Bam Bam
Ra bam Bam Bam Bam - 3



மீட்பின் திருநாளைப் பாடுங்கள்
மேய்ப்பன் துணையோடு வாழுங்கள் - 2 ஒ..ஒ..ஒ
தீமை நீங்கவே தூய்மையாகவே
தீபமேற்றி தொழுவோம்
எல்லோரும் வேண்டுங்கள் என்னோடு பாடுங்கள்
பாடி பாடி நலம் தேடி தேடி
வரம் கோடி கோடி பெறுவோம் - பரலோகம்


Ramchic Bamchic Ba Bam Bam
Bamchic Bamchic Ba Bam Bam
Ramchic Bamchic Ba Bam Bam
Ra bam Bam Bam Bam


Ramchic Bamchic Ba Bam Bam
Bamchic Bamchic Ba Bam Bam
Ramchic Bamchic Ba Bam Bam
கிறிஸ்துமஸ் நாளிதுவே



17

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர் - 2

அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் - 2

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற - 2
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்

அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் - 2


2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே - 2
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் ~ அதி

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்

அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் - 2



18

பாலன் இயேசு பிறந்த செய்தி உனக்குத் தெரியுமா?
அவர் விண்ணை விட்டு மண்ணில் வந்த சேதி தெரியுமா? 2
ஆஹா Happy Happy Merry Merry Christmas to you



ஏழை இல்லம் இறங்கி வந்த தேவன் பொற்பதம்
ஏழை எல்லாம் வாழச் செய்யும் செய்கை அற்புதம் 2
பாவம் போக்கி மனதைக் கழுவி
தந்தேனன் அர்ப்பணம் இனி உயிர்கள்யாவும்
கூடிவந்து சொல்லும் வந்தனம் - 2



வானில் வந்த தூதர் கூட்டம் சொன்ன சங்கதி
நேரில் வந்த மந்தை தோழர் கண்ட நிம்மதி 2
ஏழை கொண்ட எளிய நெஞ்சம் உந்தன் சந்நிதி
இதைக் கண்டு கொண்டேன் எந்த நாளும்
நீயே என் கதி 2





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா