Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் கற்கண்டே வைரமே  
ஆரிராரோ
ஆ ஆ ஆ ஆ
ஆரிராரோ
ஆராரோ ஆராரிரோ..

கற்கண்டே வைரமே ஆரிராரோ
கன்னி மரியின் செல்லமே ஆராரோ!
சூர்ய உதயமே ஆரிராரோ
சூசை தந்தையின் சொத்தே ஆராரோ!
கட்டு கரும்பே ஆராரோ!
கடவுள் செல்வமே ஆராரோ!
ஈசா வேர்துளிரே ஆராரோ!
தாவீதின் மரமே! ஆராரோ!

ஆராரோ கண்ணே ஆராரோ!...2

மண்ணில் பூத்த விண்மலரே! ஆராரோ கண்ணே ஆராரோ!
என் நெஞ்சில் வந்த பொன்மலரே ஆராரோ
வார்த்தையாக வாழ்ந்தவா! ஆராரோ
வார்த்தை மனுவுருவானவா! ஆராரோ
பெத்லேகம் கொடுத்த பெட்டகமே! ஆராரோ
வைக்கோலில் மின்னும் வைடூரியமே ஆராரோ
ஆராரோ கண்ணே ஆராரோ!2

கற்கண்டே வைரமே ஆரிராரோ
கன்னி மரியின் செல்லமே ஆராரோ!
சூர்ய உதயமே ஆரிராரோ
சூசை தந்தையின் சொத்தே ஆராரோ!...

வாக்கு மாறா இரத்தினமே! ஆராரோ
வாக்கு தந்த புத்திரனே! ஆராரோ
மனுக்குலம் வந்த விண்ணவா! ஆராரோ
மனுக்குலம் மீட்க உதித்தவா! ஆராரோ
ஆதியே அந்தமே ஆண்டவா!ஆராரோ
அகரமும் னகரமும் ஆனவா! ஆராரோ
ஆராரோ கண்ணே ஆராரோ!2


ஆராரோ கண்ணே ஆராரோ!...4







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா