கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | கன்னியின் செல்வமே |
கன்னியின் செல்வமே ஆராரிரோ கவியோடு இசைக்கிறேன் ஆரீரோ ஊறவாடும் வேந்தனே ஆராரீரோ உறங்கு பாலனே ஆரீரோ ஒளியே தேவ ஒளியே வழியே விண்ணக வழியே ஆராரிரோ ஆரீரோ ஆரிராரோ ஆராரிரோ தொழுவத்தில் பிறந்தோனே ஆராரிரோ தொழுகின்றோம் உம்மையே ஆரிரோ-2 மண்ணுலகம் மீட்படைய மனுஉருவாய் மரிமடியில் அவதரித்த ஆண்டவனே ஆராரிரோ விண்ணுலகை எம்மிடையே விதைத்திடவோ மனுவானாய் மாமரியின் புத்திரனே ஆரிரோ மாசற்ற செம்மறியே ஆராரிரோ மகிழ்கின்றோம் உம் வரவால் ஆரிரோ வாழ்வுக்கு வழியானாய் மண்ணுக்கு ஒளியானாய் உயிரில் ஒன்றானவனே ஆராரிரோ உயிருக்கு உறவானாய் மனதுக்கு நலமானாய் மடிமீது கண்ணுறங்கு ஆரிரோ |