கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | காலம் பனிக்காலம் |
அல்லேலூயா அல்லேலூயா (2) காலம் பனிக்காலம் வானில் ஒலிக்கோலம் ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம் பாலன் பிறந்தார் அன்று பாசத் திருநாள் இன்று தீபச்சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள் பூக்களின் எழில் புன்னகை தனில் இறைமகன் பாலன் முகம் காணலாம் நீரலை எழும் நீழ்கடல் தனில் இறைமகன் நேசம் காணலாம் பகலில் மேகமாய் இரவில் தீபமாய் காக்கும் இறைநாமமே கலங்காதே நாம் வாழலாம் காவியம் புகழ் பரமனின் அருள் மழைத்தரும் மேகம் ஆகுமே பாலகன் பதம் பணிந்திடும் மனம் ஒளி விடும் தீபம் ஆகுமே அமைதியே செல்வமாய் அருளையே அற்புதமாய் தாரும் இறை இயேசுவே எம் வாழ்வு ஒளிவீசுமே |