Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் இஸ்ரயேலின் நாதனான இயேசு  
இஸ்ரயேலின் நாதனான இயேசு பூமி வந்த நேரம்
நட்சத்திரம் கண்சிமிட்டும் காலம்
நள்ளிரவில் வான தூதர் கானம் பாடுகின்ற நேரம்
ஆட்டிடையர் அச்சப்படும் நேரம்
பாலனாய் வந்தீர் இயேசுவே
பாவங்கள் எல்லாம் நீங்குமே
முன்னணை வந்த என் தெய்வமே
என்னையும் உம்முடன் சேருமே  2

அன்னைமரி பாலனாய் அவதரித்தீர்
தொழுவில் கந்தையினில் கண்ணயர்ந்தீர்
வான் வெளியில் விண்மீன் வழிகாட்ட
கீழ்த்திசை ஞானியர் தேடினர்
பொன் வெள்ளைப் போளம் தூபமுமாய்
காணிக்கைப் பொருட்களை ஈந்தனரே - 2
பாலனாய் வந்தீர் இயேசுவே
பாவங்கள் எல்லாம் நீங்குமே
முன்னணை வந்த என் தெய்வமே
என்னையும் உம்முடன் சேருமே

செங்கடலில் நீர் அன்று பாதை கொடுத்தீர்
பசியில் தவிக்கையில் மன்னா கொடுத்தீர்
சுடு வெயிலில் மேக நிழலானீர்
இரவில் ஒளிரும் தீபமானீர்
கானான் சேரும் வரையில் நீர்
கண்ணின் மணியாய்க் காத்திருந்தீர்  2









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா