Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் என்ன கொடுத்தாலும் ஈடில்லையே  
என்ன கொடுத்தாலும் ஈடில்லையே -இறைவா
எதைத் தந்தாலும் நிறைவில்லையே 2
பொன்னும் தருவதா நறும்தூபம் தருவதா
வெள்ளைப்போளமும் சேர்த்து தருவதா
எதை நான் தந்தால் ஏற்பாயோ - நீர்
தந்த கொடைகளையே உமக்கே தருகிறேன்


ஆண்டவரே அனைத்துலகின் இறைவா - உமது
அருள்கொடையால் அப்பத்தை பெறுகின்றோம்-2
நிலத்தின் விளைச்சலாக உழைப்பின் பயனுமாக -2
அப்பத்தை தருகின்றோம் வாழ்வளிக்கும் அப்பமாக மாற்றுமே
மாற்றும் இயேசுவே உமதாய் மாற்றுமே
வாழ்வளிக்கும் அப்பமாக மாற்றுமே -2

ஆண்டவரே அனைத்துலகின் இறைவா - உமது
அருள்கொடையால் இரசத்தைப் பெறுகின்றோம்-2
திராட்சையின் தியாகமாக உழைப்பின் பயனுமாக -2
இரசத்தை தருகின்றோம் ஆன்மீக பாணமாக மாற்றுமே
மாற்றும் இயேசுவே உமதாய் மாற்றுமே
ஆன்மீக பாணமாக மாற்றுமே -2







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா