கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482- |
பாடல்: தந்தை பென்னி. பண்: திரு. அற்புதசாமி இறைமகனே இறைமகனே குழந்தை இயேசு பாலகனே கண்மணியே என்னுயிரே கண்ணுறங்கு பொன்மணியே - 2 உமைக் கண்டு உளம் துள்ளி மகிழுதே உம் பிறப்பால் நானிலமும் செழிக்குதே - 2 கவிதைகளால் பாமாலை சூடுகிறோம் ஆரிரோ தொழுவத்திலே தவழ்ந்திடுவாய் மரியின் செல்ல பலகனே புவி மாந்தருக்கு மீட்பைத் தந்திட மனு உருவாக உதித்த மாதவா சின்ன விழியின் விரிப்பில் அமைதி அளிக்கிறாய் சிவந்த இதழின் சிரிப்பில் இதயம் நிறைக்கிறாய் காரிருளை கண்ட மாந்தர் பேரொளியைக் காணச் செய்தீர் அழகின் அமுதே தாலேலா (இறைமகனே) எம்மில் அன்பு இல்லை அமைதி இல்லையே எங்கும் உண்மை இல்லை உவகை இல்லையே எளிமை இனிமை அமைதி உருவின் விடிவிலே எங்கள் சொந்தமாக வந்த வள்ளலே எங்கள் வழியும் ஒளியும் நீயே நீங்காத சொந்தம் நீயே கண்ணே மணியே கண்ணுறங்குவாய் (இறைமகனே) ஆராரி ஆராரிராரிரோ ஆராரி ஆராரிராரிரோ ஆராரி ஆராரிராரிரோ ஆராரி ஆராரிராரிரோ கிறிஸ்து பிறப்பு பாடல் (நன்றி கீதம்) பாடல்: தந்தை யூஜின் பண் : தந்தை ஜெயன் ஜொசப் தொகையறா: உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சியும் பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக வார்த்தையான வானதேவன் மண்ணில் வந்து நம்மைப்போல பிறந்தாரே பார்த்த ஏழை இடையர்கள் தாழ்ச்சி கொண்ட பாலன் கண்டு மகிழ்ந்தாரே எங்கெங்கும் ஆனந்தமே நற்செய்தி ஆரம்பமே மனுக்குலம் மகிழ்ந்திடுமே நம்மிடையே இம்மானுவேலே Happy Happy Christmas, (Love), Peace and Joy of Christmas Merry Merry Christmas We Wish you a Merry Christmas கடவுளின் தன்மை நின்று அடிமையின் கோலம் பூன்டார் மானிடம் மீட்படைய மனிதனாய் பிறந்தாயே இறையன்பு இதுவன்றோ இருக்கின்ற பொருள் யாவும் இறை தந்த கொடை அன்றோ பகிர்ந்துண்டு மகிழ்வோமே பாலன் அருள் பெறுவோமே ஆதிலன்றோ ஆனந்தமே.. தொழுவத்தில் பிறந்த எளிய என் இறைவா தலைக்கனம் தகர்ப்பாயே தொழுவத்தில் பிறந்த எளிய என் இறைவா எனில் வந்து பிறப்பாயே முற்காலத்தில் முன்னோரிடம் பல்வகையில் பேசும் நாதா இக்காலத்தில் நம்மிடையே பேசுகின்றார் மகன் வழியாய் இறையன்பு இதுவன்றோ அருள் நிறை மரியே என்று கபிரியேல் வாழ்த்துச் சொல்ல கலங்கிய அன்னை மரி கடவுளின் மகனை பெற்று தாழ்ச்சியின் வடிவம் கொண்டாரே தொழுவத்தில் பிறந்த எளிய என் இறைவா தலைக்கனம் தகர்ப்பாயே தொழுவத்தில் பிறந்த எளிய என் இறைவா எனில் வந்து பிறப்பாயே Happy Happy Christmas, (Love), Peace and Joy of Christmas Merry Merry Christmas We Wish you a Merry Christmas வருகைப்பாடல்; (நெஞ்சில் வாழும்) பாடல்: பண்: திரு. அனிட்டர் ஆல்வின் இறைவனில் இணைந்திட எழுந்திடுவோம் நம் இகமதில் இறைவனை புகழ்ந்திடுவோம் ஆண்டவன் சன்னிதி கூடிடுவோம் நம் அவனியில் அவர் புகழ் பாடிடுவோம் புனிதம் மலர மனிதம் ஒளிர இறைவன் வார்த்தையை பகிர்ந்திடுவோம் இறைவன் அரசு உலகில் பரவ கரங்கள் கோர்த்து உழைத்திடுவோம் தந்தையின் அன்பை தரணியில் நமக்கு தந்திட தேவன் அழைக்கின்றார் தன்னலம் மறந்து பிறரன்பில் வளர தன்னையே பலியாய் தருகின்றார் ஏழை எளிய மாந்தர் வாழ்வில் ஏற்றம் காண அழைக்கின்றார் உலகில் சென்று பலன்கள் தரவே உன்னத தேவன் அழைக்கின்றார் அன்பினிலே சங்கமிப்போம் அன்புலகம் நாம் படைத்திடுவோம் - 2 கருணை தெய்வம் கனிந்த உள்ளம் கடைக்கண் நோக்கி அழைக்கின்றார் பகிரும் வாழ்வில் மகிழ்வைக் காண வாழ இறைவன் அழைக்கின்றார் தியாக சுடராய் வாழ்வின் நிறைவாய் வாழும் தந்தை அழைக்கின்றார் உலகம் வாழ உயிரை ஈந்த உயிரின் தேவன் அழைக்கின்றார் அன்பினிலே சங்கமிப்போம் அன்புலகம் நாம் படைத்திடுவோம் - 2 தியானப்பாடல்: நமக்காகவே பாடல் திரு ஆல்வின் அனிட்டர் நமக்காகவே இன்று மீட்பர் பிறந்துள்ளார் ஒன்று கூடுவோம் பண் பாடி மகிழுவோம் அவரே ஆண்டவர் நமது மெசியாவானவர் அன்பு நெறியிலே நம்மை வாழ வைப்பவர் புதிய பாடலால் நாமும் பாடி வாழ்த்துவோம் விடியல் வேந்தனை நாளும் வாழ்த்தி வணங்குவோம் மாநிலத்தில் வாழ்வோரே மகிழ்ந்து பாடவே மனு உருவில் உதித்தவரை வாழ்த்தி போற்றவே வானம் பூமி யாவுமே மகிழ்ந்து பாடவே வாழும் கடலின் உயிரினம் ஆர்ப்பரிக்கவே இறைவன் இயேசுவின் இனிய மீட்பு செய்தியை எடுத்து சொல்லுவோம் உலகின் எல்லை வரையிலும் நிலவுலகில் நேர்மையுடன் ஆட்சி நடக்கவே நீதித்தீர்ப்பில் மக்களினம் மகிழ்வு காணவே வயல் வெளியும் வனத்தில் உள்ள மரங்கள் யாவுமே வல்லவரின் திருமுன்னே மகிந்து பாடவே இறைவன் இயேசுவின் இனிய மீட்பு செய்தியை எடுத்து சொல்லுவோம் உலகின் எல்லை வரையிலும் கிறிஸ்துமஸ் நடனம் பாடல்: தந்தை ராஜன்- பண்: தந்தை பென்னி விடுதலையின் நாயகனே விலங்கொடிக்கப் பிறந்தவனே விடியாலக வந்த இயேசு பாலகனே (2) உரிமைகள மீட்டெடுக்கப் பிறந்தவரே உண்மைக்கு சாட்சியாகத் திகழ்ந்தவரே (2) தீபம் போல இருளப் போக்கி உலகம் முழுதும் ஒளியேத்துவோம் (2) சாதியச் சகதியப் பூசிக்கிட்டோம் நான் மேல நீ கீழ பிரிச்சுக்கிட்டோம் மகத்துவப் படைப்பாம் மனிதனையே தாழ்ந்தவன் தீட்டுன்னு ஒதுக்கி வச்சோம் - இந்த ஏற்றத் தாழ்வு பாகுபாடு நொறுங்கிடவே எல்லோரும் சமமென்று உணர்ந்திடவே இறைவனின் படைப்பினில் குறையில்லையே - இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பாடல் - திரு ராபி ரேமண்ட் பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி தாத்தா வந்தேனே கிறிஸ்மஸ் தாத்தா வந்தேனே பாலன் இயேசு குடிலில் பிறந்தார் அறிவிக்க வந்தேனே உலகம் அறிந்திட வந்தேனே (2) கடவுள் என்றும் நம்மோடு கவலை ஏதும் இல்லையே (2) உள்ளம் பொங்கி வாழ்த்து கூறி பாடல் பாடிடுவோம் - 2 ஆநசசல ஊhசளைவஅயள ர்யிpல நேற லுநயச மகிழ்ந்தே ஆடிடுவோம் - 2 உள்ளத்தின் நிறைவை உதடுகள் பேசும் மகிழ்ந்தே ஆர்ப்பரிப்போம் - நாளும் மகிழ்ந்தே ஆர்ப்பரிப்போம் தாளம் இசைத்து கீதம் பாடி மகிழ்வைப் பரப்பிடுவோம் நமது மகிழ்வைப் பரப்பிடுவோம் (2) |