கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | ஆராரோ பாலகனே |
ஆராரோ கண்ணே ஆராரோ (2) ஆராரோ பாலகனே ஆராரிரோ - 2 ஆதாமின் குறை போக்க ஆண்டவனாய் பிறந்துவிட்டாய் அன்னைமரி பாலகனாய் அணையா ஒளி ஆகி விட்டாய் கன்னிகையின் கண்மணியே கடவுளின் திருமகனே காரிருளை நீக்கிடவே கதிரவன்போல் நீ வளர்ந்தாய் கண்ணுறங்கு காவலனே காளையாக நீ மலர்ந்தாய் கண்ணிமைகளாயிருப்பாய் கனியாக வந்தருள்வாய் ஆராரோ ஆராரிரோ - 2 வல்லவனாய் வாழ்ந்திடுவாய் வானவரின் மேலவனே நல்லவர்கும் தீயவர்க்கும் நலமருளும் போதகனே சொல்லச் சொல்ல நாவினிக்கும் சுவை பெருகும் பெயருனக்கு வெல்லமது வேல்முனைபோல் விசையூட்டும் விருவிருப்பு |