கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | அன்பான மனுவொன்று |
ஆராரி ராராரிரோ, ஆராரி ஆராரிரோ ஆராரி ராராரிரோ, ஆராரி ஆராரிரோ அன்பான மனுவொன்று அமுதாக மனமின்று அகம் வாழ்ந்திட லல ல அருள் தந்திட ல ல ல அழகாக சிரிப்போடு பிறக்கின்றதே - 2 விடியாத இரவொன்று விடியலின் விழிகண்டு விண்ணாளன் வருவதை வியக்கின்றதே - 2 விலகாத என் நெஞ்சின் வினை போக்க தனை தந்து மனுவானார் மரிமைந்தன் மண்மீதிலே இகம்பாடும் இனி எந்தன் சுகராகமே என் சுகராகமே ஆராரிரோ 2 ஆராரி ராராரி ராராரிரோ ஆராராரிரோ பசியாற பலகோடி உயிர்களின் உயிராக விண்தெய்வம் தரிசனம் தருகின்றதே -2 என் வாழ்வின் வலி உந்தன் பிறப்பாலே சிறப்பாக துடைப்பாயோ திருமைந்தன் தினந்தோறுமே இகம்பாடும் இனி எந்தன் சுகராகமே என் சுகராகமே ஆராரிரோ 2 ஆராரி ராராரி ராராரிரோ ஆராராரிரோ |