கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482- | ஆண்டவரில் நாம் அக்களிப்போம் |
ஆண்டவரில் நாம் அக்களிப்போம் ஏனெனில் நம் மீட்பர் பிறந்துள்ளார் (2) வாருங்களே ஆர்ப்பரிப்போம் கூடுங்களே இன்று அகமகிழ்வோம் வானங்கள் மகிழ்ந்திடும் பூவுலகம் மகிழ்ந்திடும் கடல் வாழும் உயிரினங்கள் களி கூர்ந்திடும் (2) வயல் வெளிகள் ஆர்ப்பரிக்கும் மரங்களெல்லாம் மகிழ்வடையும் (2) பூவுலகை ஆட்சி செய்ய இயேசு வந்து பிறந்துள்ளார் (2) வாருங்களே ஆர்ப்பரிப்போம் கூடுங்களே இன்று அகமகிழ்வோம் வானவர்கள் வாழ்த்தவே மண்ணுலகோர் மகிழவே விண் துறந்து மண்ணில் வந்தார் இயேசு பாலனே (2) அமைதியின் மன்னன் அவர் அழிவில்லா தந்தை அவர் (2) அவரது ஆட்சியின்றி முடிவின்றி தொடர்ந்திடும் (2) வாருங்களே ஆர்ப்பரிப்போம் கூடுங்களே இன்று அகமகிழ்வோம் |