கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1491-வெல்ல வந்த செல்லமே |
வெல்ல வந்த செல்லமே ஆரிராராரோ எந்தன் உள்ளம் பிறந்தாய் ஆரிராராரோ (2) உன்னைக் கண்ணாற கண்டிடவே நெஞ்சம் நாடுதே மனம் உன்னாலே அன்பாலே சொந்தம் பாடுதே (2) ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ - 2 சொல்ல முடியா பழியும் எதிர்கொள்ள இயலா இடரும் நில்லாமல் மறைந்திடுதே உந்தன் உதயத்தில் (2) வருவாய் வருவாய் எந்தன் வாழ்விலே - 2 திருவாய் தொழுதேன் மழலை இயேசுவே ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ - 2 செல்வம் தரும் சோதனையும் பகை கொண்டு வரும் வேதனையும் இன்பங்களாய் மாறிடுதே உந்தன் புன்னகையில் (2) வாழ்வின் வளமாய் பிறந்த தெய்வமே - 2 பணிந்தேன் துணிந்தேன் உன்னில் வாழவே ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ - 2 |