கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1487-விண்ணோர் பாடவும் |
லல்ல லல்ல லா - Mary Christmas லல்ல லல்ல லா - Mary Christmas விண்ணோர் பாடவும் மண்ணோர் மகிழவும் விண்ணின் தேவன் மண்ணில் வந்தார் (2) தன்னைத் தாழ்த்தி கன்னிமரியிடம் அமலன் யேசு அவதரித்தார். லல்ல லல்ல லா - Mary Christmas லல்ல லல்ல லா - Mary Christmas விண்னோர் கூட்டம் - வானிடையே பண்ணிசைத்துப் பாடினாரே பூவின் மாந்தர் பாவம் போக்க பாரில் எங்கும் சாபம் நீங்க ஆ..ஆஆ அருள் பிறந்தது! ஆ..ஆஆ இருள் மறைந்தது! மெசியா பிறந்தார் மீட்பர் வந்தார் உலகமெங்கும் ஒளிவெள்ளம் (2) வயல் வெளியில் மேய்ப்பர் கூட்டம் கடும் குளிரில் சேதி கேட்டார் (2) தரணி மீதில் தாவீதின் ஊரில தவழ்ந்து வந்தது தேவமகிமை ஆ..ஆஆ அருள் பிறந்தது! ஆ..ஆஆ இருள் மறைந்தது! மெசியா பிறந்தார் மீட்பர் வந்தார் உலகமெங்கும் ஒளிவெள்ளம் |