Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1486-விண்ணகத்தின் சுடரே  
விண்ணகத்தின் சுடரே
மண்ணில் வந்த நிலவே
மனிதத்தை மாற்றிட வா - என்
மனதினில் வாழ்ந்திட வா (2)

நீ எந்தன் வாழ்வோடு இணையும் போது
இன்பங்கள் பெருகிடுமே
என் ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடுமே (2)
நானுன்னை என்னில் ஏற்கும் போது - 2
ஏக்கங்கள் தீர்ந்திடுமே - என்
ஏழ்மையும் மாறிடுமே

நான் எந்தன் வாழ்வில் அழியும் போது
உறவுகள் மலர்ந்திடுமே
புதுவாழ்வும் வழியும் பிறந்திடுமே (2)
நான் உந்தன் வார்த்தையை வாழும் போது - 2
வருத்தங்கள் விலகிடுமே - நல்
அமைதி ஆட்கொள்ளுமே
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா