கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1485-வானவர்களே மகிழ்ந்திடுங்கள் |
வானவர்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூருங்கள் இறைவன் நமக்காய் பிறந்துள்ளார் அவரே நம் மீட்பர் மெசியா - 2 புதியதோர் பாடலைப் பாடுங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுங்கள் அவர்தரும் மீட்பின் மாட்சியை நினைத்து புறவினத்தாருக்கு அறிவியுங்கள் அஞ்சாதீர் இதோ மீட்பர் நமக்காய் பிறந்துள்ளார் ஏனெனில் அவரே வந்துள்ளார் உலகினை ஆளவே வந்துள்ளார் நீதியில் மக்களை அரசாள்வார் நேர்மையில் என்றும் குறைவில்லை அஞ்சாதீர் இதோ மீட்பர் நமக்காய் பிறந்துள்ளார் அக்களிப்போடு பாடுங்கள் அகமகிழ்வோம் களிகூருங்கள் வியத்தகு செயல் பல செய்துள்ளார் நீதியை அனைவருக்கும் அறிவித்தார் அஞ்சாதீர் இதோ மீட்பர் நமக்காய் பிறந்துள்ளார் |