கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1484-வானம் பொழிந்த அன்பே |
வானம் பொழிந்த அன்பே வாழ்வுக்கான அமுதே (2) வணங்கி உன்னை வேண்டினேன் வழங்கிட வா வா - என்னை வாழ்விக்க வா வா ஆயனில்லா ஆடு என அலைந்தது போதும் - 2 நல் ஆவியில்லா ஜீவியமாய் அழிந்தது போதும் - நான்... (2) நேயமில்லா நெஞ்சங்களால் சோர்ந்தது போதும் - என் காவல் உன்னை வேண்டுகிறேன் கைதூக்க வாரும் நீ கொடுத்த அன்பளிப்பு நிறை சமாதானம் அது நிர்மூலமாய் ஆனதய்யா - அதை இன்று காணோம் (2) உமதன்பு பாதையில் தான் எமக்கது தோணும் நல் காருண்யமே எம் வாழ்வில் நீ தொடுவானம் வானங்களே கூரையென வாழ்ந்திடும் பூக்கள் - பல வண்ணங்களால் புன்னகைத்து மின்னுதல் போலே (2) வானவனே நானுனையே வாழ்வினுக்காக தினம் வேண்டுகிறேன் வேண்டுகிறேன் வாழ்விக்க வாரும் |