கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1482-வார்த்தையானவர் மனிதனாகிறார் |
வார்த்தையானவர் மனிதனாகிறார் மண்ணில் இன்று விண்ணின் சங்கமம் மனித குலத்தில் தெய்வம் சங்கமம் இருளில் இறைவன் ஒளியின் சங்கமம் (2) இறைமக்கள் விண்ணில் மகிமையே - அவர் தயவுள்ளோர்க்கு மண்ணில் அமைதியே கொட்டும் பனியின் குளிரிலே வாழ்வு பிறக்குது நள்ளிரவின் அமைதியிலே தூக்கம் கலையுது இறந்தவரை எழுப்பிடவே நம் சாவை அவர் ஏற்றார் பாவத்தின் தசையாக அவர் பிறந்து சிறை உடைத்தார் மீளாத துயரம் மறைந்தது இறைவனின் பேரிரக்கம் சுரந்தது நமது மீட்பின் நாளிதுவே மகிழ்ந்து பாடுங்கள் இறைவன் தந்த பெருங்கொடையிது கொண்டாடுங்கள் தாய்மரியின் தவப்புதல்வன் தரணிக்கே தலைமகனாம் வாழ்கி;ன்ற நமக்கெல்லாம் உண்மை வழி ஒளியாவார் நீதி அமைதி இங்கு சங்கமம் உள்ளமெங்கும் இனிய மங்களம் |