கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1481-வான்வீட்டின் கொடையாக |
வான்வீட்டின் கொடையாக வட்ட நிலா முகமாக (2) ஆனிப்பொன் உருவாக அவதரித்த பாலகனே - 2 நீ எந்தன் நெஞ்சில் நிலையாக பிறக்க அருள் கோடி தாருமையா (2) உண்மையும் நேர்மையும் இருக்கின்ற மனமே நீ வந்து பிறக்கின்ற திருக்கோவில் (2) தூய்மையும் தியாகமும் சிறக்கின்ற மனமே - 2 உன் ஆசீர் வருகின்ற அருள்வாயில் இந்த தூய மனம் நான் பெறவே - என் நாயகனாக நீ வரவே அருள் கோடி தாருமையா அன்பும் அமைதியும் நிறைகின்ற மனமே நீ வந்து பிறக்கும் தேவாலயம் (2) பண்பும் பாசமும் வழிகின்ற மனமே - 2 பரம் பொருளே உனக்கும் சரணாலயம் இந்த தூய மனம் நான் பெறவே - என் நாயகனாக நீ வரவே அருள் கோடி தாருமையா |