கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1480-வானவர் இசையில் |
வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் - 2 அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவு - நம் இதயம் வென்ற உறவு ஆரி ரா ராரோ ஆரி ராரி ரா ராரோ ஆரி ரா ராரோ அன்பெனும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்து இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் தன்னலம் அறம் மறந்து மண்ணவர் நிலையுணர்ந்து விண்ணவன் விழி திறக்க மண்ணவர் மகிழ்ந்திருக்கும் நம்மவர் விழி திறக்க நற்புது வழி பிறக்க நலந்தரும் சொல்லுருவோன் நம்மிடை பிறந்திருக்கும் |