கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1479-மெல்லலை பொங்கிட |
மெல்லலை பொங்கிட புள்ளினம் துள்ளிட பூமழைக் கோலமிது உறவைத் தேடும் உண்மை தேவன் பிறந்த நேரமே கொட்டிடும் வெண்பனிச் சாரலிலே உனை தாலாட்டி பாடவா நொந்திடும் துயர ஆற்றினிலே உனை சீராட்டிப் பாடவா (2) இதயத் தொட்டிலில் சேயுனை வைத்து யாழினை மீட்டவா (2) புரட்சிப் பூவை அர்ச்சனையாக்கி வேள்வி செய்யவா (2) பேதங்கள் பாடும் ஆதங்க பாட்டின் நாதமே கேட்கலையா செந்நீர் சிந்தும் வேதனை கீதம் பாலனை வேண்டுமா (2) தொழுவில் பிறந்து கழுவில் மறைந்து மீட்டிட வந்தாயோ (2) அழிவைத் தேடும் உலகைக் காக்க என்னுரு ஏற்றாயோ (2) |